/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
/
வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு
ADDED : ஆக 08, 2024 05:46 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தலின்-படி, பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடை நின்ற குழந்-தைகள் கணக்கெடுப்பு பணி, மாவட்டம் முழுவதும் நடக்கிறது. தர்மபுரி ஒன்றியம், குப்பூர் பஞ்., உட்பட்ட பலாமரத்துக்-கொட்டாய் தொடக்கப்பள்ளி அருகே, செங்கல்சூளையில், வட-மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றுகின்-றனர். அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், வீட்டில் இருப்பதாக, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளாவிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் ரவிக்குமார் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை-ராஜன், தர்மபுரி ஒன்றிய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன், ஆசிரியர் பயிற்றுனர்கள் அருண்குமார் மற்றும் தலைமை ஆசி-ரியர் அடங்கிய குழுவினர், செங்கல் சூளை பகுதிக்கு நேரில் கள ஆய்வு செய்தனர். அப்போது, செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்கள், பீஹார் மாநிலம் கயா மற்றும் நவாடா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், இவர்களின் குழந்தைகள் பள்-ளியில் சேர்க்கப்படவில்லை என தெரிந்தது. அவர்களுக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்ததால், ஆசிரியர் இம்ரான், அவர்களுடன் பேசினார். அப்போது அரசின் பல்வேறு திட்டங்களை தொழிலா-ளர்களுக்கு விளக்கி, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்-தினார்.
இதையடுத்து, வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள், 5 பேர் முதல் வகுப்பிலும், 3 பேர், 2ம் வகுப்பிலும், இருவர் மூன்று மற்றும் 5ம் வகுப்பிலும் என, பலாமரத்துக்கொட்டாய் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.