ADDED : ஜூலை 06, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பண்ணப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எஸ்.தட்டனப்பள்ளி கிராமத்தில், வேப்பன-ஹள்ளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்-ளது. அதேபோல், ராமன்தொட்டி கிராமத்தில், 21.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு பள்ளிக்கு இரு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை வேப்பனஹள்ளி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முனுசாமி, மாணவ, மாணவியருடன் சேர்ந்து நேற்று திறந்து வைத்தார்.
சூளகிரி ஒன்றிய செயலர் வெங்கடாசலம், அ.தி.மு.க., அவைத்த-லைவர் முனிசந்திரப்பா, துணை செயலர் சின்னபைய்யா, பொரு-ளாளர் நாராயணப்பா, அத்திமுகம் பஞ்., தலைவர் சுரேஷ் உட்-பட பலர் பங்கேற்றனர்.