/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்மார்ட் பேனல் போர்டு அரசு பள்ளியில் திறப்பு
/
ஸ்மார்ட் பேனல் போர்டு அரசு பள்ளியில் திறப்பு
ADDED : ஆக 04, 2024 01:24 AM
ஓசூர்,
ஓசூர், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு, டைட்டன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு வகுப்பறைகளில் இன்ட்ராக்டிவ் ஸ்மார்ட் பேனல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் நர்மதா தேவி முன்னிலை வகித்தார். டைட்டன் நிறுவன சமூக மேம்பாட்டு மன்ற தலைவர் பன்னீர்செல்வம், இன்ட்ராக்டிவ் ஸ்மார்ட் பேனல் போர்டுகளை திறந்து, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினார். அதில், மாணவ, மாணவியருக்கு, ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதை பார்வையிட்டார். வைரவேல், டைட்டான் நிறுவன தொழிலாளர் சங்க துணைத்தலைவர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.