/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாசன வாய்க்காலை சுத்தம் செய்த அதிகாரிகள்
/
பாசன வாய்க்காலை சுத்தம் செய்த அதிகாரிகள்
ADDED : ஜூலை 02, 2024 06:11 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில், முதல்-போக சாகுபடிக்கு கிழக்கு மற்றும் மேற்கு பிரதான வாய்க்கால்-களில் தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, பாரூர் பெரிய ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது.
கிழக்கு பிரதான வாய்க்காலில் இருந்து கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்-பட்டி, தாதம்பட்டி, விருப்பம்பட்டி, திருவனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், பாரூர் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. இதில், 2 அடி உயரத்திற்கு புற்கள் முளைத்தும், புதர் மண்டியும் கிடந்தது. இதை துார்வாரி புதர்களை அகற்ற விவசா-யிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த செய்தி நம், 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த ஜூன், 11ல் வெளியானது. இந்-நிலையில், தற்போது பாரூர் ஏரியிலிருந்து விருப்பம்பட்டி வரை உள்ள வாய்க்கால் முழுவதும் துார்வாரப் பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.