/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'பட்ஜெட் மூலம் பீஹார், ஆந்திராவுக்கு நன்றி செலுத்திய பிரதமர் மோடி'
/
'பட்ஜெட் மூலம் பீஹார், ஆந்திராவுக்கு நன்றி செலுத்திய பிரதமர் மோடி'
'பட்ஜெட் மூலம் பீஹார், ஆந்திராவுக்கு நன்றி செலுத்திய பிரதமர் மோடி'
'பட்ஜெட் மூலம் பீஹார், ஆந்திராவுக்கு நன்றி செலுத்திய பிரதமர் மோடி'
ADDED : ஜூலை 24, 2024 10:22 AM
கிருஷ்ணகிரி: ''மத்திய பட்ஜெட் மூலம் பீஹார், ஆந்திராவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.
கிருஷ்ணகிரியில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் பீஹார், ஆந்திராவுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதமர் மோடி, தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராக இருந்தாலும், தான் ஒரு சாதாரண அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது.
அதனால் தான் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகத்தில் ஆய்வு செய்வது போல், மக்களை ஏமாற்றும் வகையில் நாடகமாடுகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சாதாரண மக்களின் கஷ்டம் தெரியாது. அதனால், விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக பேசி வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.