/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொள்ளையடிக்க திட்டம் 5 பேர் கும்பலுக்கு காப்பு
/
கொள்ளையடிக்க திட்டம் 5 பேர் கும்பலுக்கு காப்பு
ADDED : மே 01, 2024 02:31 AM
ஓசூர்:தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகனசுந்தரம் மற்றும் போலீசார், பேலாளம் சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது,
அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, 5 பேர் கும்பல் பயங்கர
ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது,
குனிக்கல் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத், 35, கிரீஷ், 40, ராஜேஷ், 28, தளி
மராட்டி தெருவை சேர்ந்த பாலாஜி, 22, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை
சேர்ந்த ரவி, 25, என்பதும், அவர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க
திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள், 5 பேரையும்,
போலீசார் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல்செய்தனர்.
இதில்,
தளி ஸ்டேஷனில் மஞ்சுநாத் மீது, ஒரு கொலை முயற்சி மற்றும் அடிதடி உட்பட,
5 வழக்கும், கிரிஷ் மீது இரு அடிதடி வழக்கும் உள்ளது
குறிப்பிடத்தக்கது.