தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 29ல் ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி., சிறப்பு முகாம்

29ல் ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி., சிறப்பு முகாம்

29ல் ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி., சிறப்பு முகாம்


ADDED : ஆக 27, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைக-ளிலும் வரும், 29ம் தேதி இ-கே.ஒய்.சி., சிறப்பு முகாம் நடக்கும் என,மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி முன்-னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு-களில் உள்ள உறுப்பினர்களுக்கு கைரேகை சரிப்பார்ப்பு பணி, 100 சதவீதம் முடிக்க வேண்டுமென, மத்திய அரசு தெரிவித்துள்-ளது.அதன் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைரேகை சரிபார்ப்பு பணி அக்., -2023 முதல் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்-படி, முன்னுரிமை ரேஷன் அட்டைகளில், 96.21 சதவீத-மும், முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளில், 87.89 சதவீத-மும் இ-கே.ஒய்.சி., மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ-கே.ஒய்.சி., பதி-வினை, 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் வரும், 29ம் தேதி, காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைக-ளிலும் இ-கே.ஒய்.சி., சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுவரை கைரேகை பதிவு செய்யாத அனைத்து குடும்ப உறுப்பி-னர்களும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை, கண் கருவிழி மூலம் இ-கே.ஒய்.சி., கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us