/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய குட்டையில் தவறி விழுந்த மாணவன், தலைமை ஆசிரியர் பலி
/
விவசாய குட்டையில் தவறி விழுந்த மாணவன், தலைமை ஆசிரியர் பலி
விவசாய குட்டையில் தவறி விழுந்த மாணவன், தலைமை ஆசிரியர் பலி
விவசாய குட்டையில் தவறி விழுந்த மாணவன், தலைமை ஆசிரியர் பலி
ADDED : மார் 06, 2025 03:48 AM
ஓசூர்: பாகலுார் அருகே, விவசாய குட்டையில் மூழ்கிய மாணவன், அவனை காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியர் என இருவரும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே எழுவப்பள்ளி கிரா-மத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 30 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஓசூர் சப்தகிரி நகரில் வசிக்கும், கூஸ்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கவுரிசங்கர் ராஜூ, 53, பள்ளி தலைமையாசிரியராக இருந்தார்.
எழுவப்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் மகன் நித்தீன், 8, மூன்றாம் வகுப்பு படித்ததார். நேற்று மதிய உணவு இடைவே-ளையின் போது, பள்ளி பின்புறம், 50 மீட்டர் துாரத்தில் உள்ள வெங்கடேஷ் என்பவரது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு பிரமாண்ட பள்ளம் தோண்டி, தார்ப்பாயை விரித்து குட்-டைபோல் விவசாயத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்-தது. நீரை பார்க்க ஏறிய மாணவன் நிலைதடுமாறி விழுந்தான்.இதை பார்த்து கொண்டிருந்த அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நித்தீனின் தம்பி நுாத்தன், 6, தலைமையாசிரியர் கவுரி-சங்கர் ராஜூவிடம் சென்று கூறினான். மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த அவரும், சாப்பாட்டை வைத்து விட்டு ஓடிச்-சென்றார். நீரில் தத்தளித்து கொண்டிருந்த நித்தீனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார். இருவரும் மூச்சுத்-திணறி பலியாகினர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் இருவரது
சடலங்களை மீட்டனர்.
விவசாய குட்டையில் மூழ்கி பலியான தலைமையாசிரியர் கவுரி-சங்கர் ராஜூ, மூன்று மாதங்களுக்கு முன் தான், இப்பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். அவரது மனைவி ஸ்ரீஷா, சென்னசந்திரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். விபத்து குறித்து, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.