/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள்
/
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள்
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள்
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள்
ADDED : ஆக 21, 2024 01:21 AM
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள்
ஓசூர், சூளகிரி அருகே, அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள், புதிய ரேஷன் கடைக்காக கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறக்கப்படாமல் உள்ளதால், 5 கி.மீ., துாரம் நடந்து சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தியாகரசனப்பள்ளி பஞ்., உட்பட்ட பீரேபாளையம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி முழுவதும் கழிவுநீர் கால்வாய், மயானம், சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள், அனைத்து பகுதிக்கும் முறையாக இல்லை. இவற்றை செய்து கொடுக்க, பஞ்., நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும், இதுவரை அவற்றை நிறைவேற்றி கொடுக்க பஞ்., நிர்வாகம் முன்வரவில்லை. அப்பகுதியில் சாக்கடை கால்வாயின்றி, குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் கடந்த ஓராண்டிற்கு முன், முன்னாள், காங்., - எம்.பி., செல்லக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 6.10 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடைக்காக பல்நோக்கு கட்டடம் கட்டி தரப்பட்டது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் கட்டடம் திறக்கப்படவில்லை. அதனால், ரேஷன் பொருட்களை வாங்க, 5 கி.மீ., தொலைவிலுள்ள மாதர்சனப்பள்ளி கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ஒரு நாள் விடுமுறை எடுத்தால் தான் ரேஷன் பொருட்களை வாங்கலாம். ராயக்கோட்டை சாலையிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் மயானம் அமைத்து தர வேண்டும் என, 25 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் கேட்டு, மாவட்ட கலெக்டர் சரயுவை
சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

