/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில இறகுப்பந்து போட்டியில் வெற்றி
/
மாநில இறகுப்பந்து போட்டியில் வெற்றி
ADDED : ஆக 02, 2024 01:35 AM
வீரர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கல்
கிருஷ்ணகிரி, ஆக. 2-
கிருஷ்ணகிரி மாவட்ட இறகுப்பந்து சங்கத்தின் சார்பில், மாவட்ட உள் விளையாட்டு அரங்கில், மாநில இறகுப்பந்து போட்டி கடந்த, 28ல் துவங்கி, 5 நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண், பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டைகள், கலப்பு இரட்டையர்கள் என, 5 பிரிவுகளில், நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. நடுவர் வெங்கட் நாராயணா தலைமையில் மாநில அளவிலான, 15 நடுவர்கள் செயல்பட்டனர்.
இறுதிப்போட்டியில், ஒன்றையர் பிரிவில், மோக்ஷிதா, சச்சின் ஆகியோர் முதலிடம் பிடித்து கோப்பை வென்றனர். இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில், லயா - நிஷின்தா, கிருதிக் - ரிப்பினேஷ், சந்தீப்குமார் - அஞ்சனா மணிகண்டன் ஆகியோர் முதலிடம் பிடித்து கோப்பை வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பரிசளிப்பு விழா நடந்து. பர்கூர், தி.மு.க,, - எம்.எல்.ஏ., மதியழகன், தமிழக பூப்பந்து சங்க மாநில செயலாளர் அருணாச்சலம், இறகுப்பந்து சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட இறகு பந்து சங்கத்தின் செயலாளர் ஷராபத்துல்லா, துணை செயலாளர் பிரேம்குமார், துணைத்தலைவர் ரமேஷ் வேலாயுதம் ஆகியோர் செய்திருந்தனர்.