நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தளி அடுத்த முத்துகுமரன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார்.
இவரது
மகள் அனிதா (18). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவனப்பாவும் கடந்த இரு
மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி
சண்டை ஏற்பட்டு வந்தது. அனிதா பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டில்
தனியாக இருந்த அனிதா விஷம் குடித்தார். சிகிச்சைக்காக ஓசூர் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிளக்காமல் பரிதாபமாக
இறந்தார். தளி போலீஸார் விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு மாதம் ஆவதால்
சப்-கலெக்டர் விசாரிக்கிறார்.

