நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தரக்குறைவாக பேசியதை கண்-டித்தும், அவரது உரையை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிர-தமர் மோடியை கண்டித்தும், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, மேற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட தலைவர் முர-ளிதரன் தலைமை வகித்தார். மாநகர தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்-டத்தில், அனுராக் தாக்கூர் மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி-கணேஷ், சிறுபான்மை அணி நிர்வாகிகள் அயூப்கான், அன்சர், சிறுபான்மை அணி நகர தலைவர் சாதிக்பாஷா உட்பட பலர் பங்-கேற்றனர்.