ADDED : ஏப் 06, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிப்புணர்வு கருத்துப்பட்டறை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறித்து, கருத்துப்பட்டறை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை மண்டலமாக கொண்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை, நீலகிரி உட்பட, 9 மாவட்டங்களை உட்படுத்தி, 'மருத்துவ அலட்சியம்' என்ற தலைப்பில் கருத்துப்பட்டறை நடந்தது. இதில், மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏராளமானோர் பேசினர். கூட்டத்தில் பங்கு பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதாராணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.