ADDED : ஏப் 09, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.சி.,யினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒருங்கிணைந்த, வி.சி., கட்சி சார்பில், வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து, நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், ஓசூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், முத்தவல்லி ஜமாத் தலைவர் நவாப், த.மு.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் நுார்முகமத், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், மகளிரணி மாநில துணைச்செயலாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.