தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த, 16ம் தேதி ஜமாபந்தி துவங்கி, நேற்று வரை நடந்தது. ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பல்வேறு வகை சான்றிதழ்கள், பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம் உட்பட மொத்தம், 1,007 மனுக்களை பெற்றார்.
நேற்று ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில், 96 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ஈமசடங்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், உட்பிரிவு மாற்றம் என மொத்தம், 12.25 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, சப்-கலெக்டர் பிரியங்கா பயனாளிகளுக்கு வழங்கினார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை, தனி தாசில்தார் சக்திவேல், தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் சுபாஷினி, மண்டல துணை தாசில்தார்கள் முருகன், ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.