ADDED : ஜூலை 02, 2025 01:54 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று, தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் சார்பில், மாணவ, மாணவியருக்கு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு விளக்க கூட்டம் நடந்தது.
இதில், மழையின்போது நீர்நிலைகளில் குளிப்பது, துணி துவைப்பது, மின் விபத்துகள், பாதுகாப்பாக பயணிப்பது, அதேபோல் வீட்டில் மாணவியர் சமையறையில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது குறித்தும், தீ விபத்தில் சிக்கினால், அதிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள், அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என விளக்கப்பட்டது. விபத்து காலங்களில் தீயணைப்புத் துறையினரின் செயல்பாடுகள் குறித்து, ஒத்திகை நடத்தப் பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.