/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேட்ராயசுவாமிக்கு திருக்கல்யாணம்
/
பேட்ராயசுவாமிக்கு திருக்கல்யாணம்
ADDED : அக் 11, 2025 12:28 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், எலத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள பேட்ராய
சுவாமி கோவிலில், புரட்டாசி மாத வருடாந்திர விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மதியம், 12:00 மணிக்கு கணபதி பூஜை, பேட்ராயசுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, பேட்ராயசுவாமிக்கு, கணபதி ஹோமத்துடன், சிறப்பு பூஜை செய்து, மஹா மந்திரங்கள் முழங்க, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மாலை மாற்றி, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சுவாமிக்கு மொய் எழுதினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு அபி ேஷகம், அலங்காரம் ஆகியவை நடக்கிறது, மாலை, 5:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள், ஸ்ரீதேவி, பூதேவி, பேட்ராயசுவாமி திருவீதி உலாவும், வான வேடிக்கையும் நடக்க உள்ளது.