ADDED : நவ 02, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்வி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவ, மாணவியர் மத்தியில், திருக்குறள் குறித்து எடுத்துரைக்கும் வகையில், தலா இரு நாட்கள் பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஓசூர் சீத்தாராம் நகர், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 'திருக்குறள் திருப்பணிகள்' பயிலரங்கம் இரு நாட்கள் நடந்தன.
தலைமையாசிரியை உமாதேவி தலைமை வகித்தார். திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் கருமலைத்தமிழாழன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராசு, பயிற்சியாளர் பவானி ஆகியோர், 80 மாணவியருக்கு திருக்குறள் குறித்து எடுத்துரைத்தனர். மாணவியருக்கு புத்தங்கங்கள், நினைவு பரிசாக, பேனா வழங்கப்பட்டது.

