நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் பேகேப்பள்ளி சர்க்கிள் பகுதியில், ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஜூஜூவாடியிலிருந்து, நல்லுாருக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 8 யூனிட் மண்ணை கொண்டு செல்வது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். தாசில்தார் குணசிவா புகார் படி, லாரி டிரைவர், உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

