நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ஓசூர் வட்டத்தின் சார்பில், கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நட்ராஜ் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அறிவழகன், சங்க கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார். ஓசூர் தாசில்தார் குணசிவா பேசினார். மாவட்ட பொருளாளர் ராம்சுரத்குமார், வி.ஏ.ஓ., திம்மராயன், நிர்வாகிகள் தங்கராஜ், மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர். ஓசூர் கோட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

