ADDED : ஏப் 19, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி :பர்கூர் அடுத்த நாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் குமார், 60, கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 16 மாலை பர்கூர், பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 2வது தளத்தில் இருந்து குமார் தவறி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு குமார் உயிரிழந்தார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
