/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்
/
ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்
ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்
ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : அக் 04, 2024 01:20 AM
ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவர்
அமைக்கும் பணி துவக்கம்
கிருஷ்ணகிரி, அக். 4-
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தவுலதாபாத் சுன்னத் ஜமாத்திற்கு சொந்தமான ரசூல் மஸ்ஜித் வளாகத்திலுள்ள அடக்கஸ்தளத்தின் பழுதான சுற்றுச்சுவரை அகற்றி, புதிய சுற்றுச்சுவர் கட்ட, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று காலை, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மக்பூல் தலைமையில், சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பூமி பூஜை மற்றும் பாத்தியா செய்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், தவுலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி தலைவர் கவுஸ் சரீப், செயலாளர் அஸ்லாம் பாஷா, பொருளாளர் சனாவுல்லா, மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் பங்கேற்றனர்.