/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.19.20 லட்சம் மதிப்பில்பல்நோக்கு மைய கட்டடம்
/
ரூ.19.20 லட்சம் மதிப்பில்பல்நோக்கு மைய கட்டடம்
ADDED : பிப் 13, 2025 01:27 AM
ரூ.19.20 லட்சம் மதிப்பில்பல்நோக்கு மைய கட்டடம்
ஓசூர்:ஓசூர் மாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட பழைய டெம்பிள் ஹட்கோ மற்றும் 11வது வார்டு பழைய வசந்த் நகர் ஆகிய பகுதிகளில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா, 9.60 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு பல்நோக்கு மையம் கட்டும் பணியை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் மாநகர மேயர் சத்யா ஆகியோர் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, 7வது வார்டுக்கு உட்பட்ட மூவேந்தர் நகர் மற்றும் ஜெ.ஜெ., நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறந்து வைத்தனர்.
தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மோசின்தாஜ், மாரக்கா சென்னீரன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம், மாநகர அவைத் தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.