/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் தி.மு.க.,வில் உட்கட்சி பூசலை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வந்த 2 அமைச்சர்கள்
/
ஓசூர் தி.மு.க.,வில் உட்கட்சி பூசலை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வந்த 2 அமைச்சர்கள்
ஓசூர் தி.மு.க.,வில் உட்கட்சி பூசலை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வந்த 2 அமைச்சர்கள்
ஓசூர் தி.மு.க.,வில் உட்கட்சி பூசலை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வந்த 2 அமைச்சர்கள்
ADDED : ஆக 18, 2024 03:50 AM
கிருஷ்ணகிரி: ஓசூரில், தி.மு.க., உட்கட்சி பூசலை தீர்க்க, பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், ஆய்வு என்ற பெயரில் நேற்று இரு அமைச்-சர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம், 31ல் நடந்தது. அதில்,  இரு பிரிவுகளாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் போட்டி கூட்டத்தை நடத்தினர். மறுநாள் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி வரவிருந்த நிலையில், இவர்கள் நடத்திய கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அமைச்சர் இது குறித்து கண்டுகொள்ள-வில்லை.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள், கட்சி தலைமையிடம் புகா-ரளித்த நிலையில், நேற்று அமைச்சர் சக்கரபாணி ஓசூர் வந்தார். வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் என்ற பெயரில், மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்களுக்கிடையிலான பிரச்னை குறித்து தனியார் ஓட்டலில், 2 மணி நேரத்திற்கும் மேல், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
நேற்று மதியம் கிருஷ்ணகிரி வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சர் நிகழ்ச்சியில், நிருபர்களுக்கு அனுமதி அளிக்-கப்படவில்லை. தமிழ்நாடு ஓட்டலில் சிறிது நேரம் இருந்த அமைச்சர், ஓசூர் சென்று, அங்குள்ள மாநகராட்சி, தி.மு.க., நிர்-வாகிகளுக்கிடையே நடந்த கோஷ்டி பூசலை சரிசெய்யும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்றுள்ளார். கிருஷ்-ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, எந்த அமைச்சரும், அரசு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க வருவதில்லை. அவர்கள் வரும் நாளில், 20 நிகழ்ச்சிகளுக்கு மேல், பெயரளவிற்கு நடத்தி சென்று விடுகின்றனர். இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்கள் மோதலை சரிசெய்யவே, இரு அமைச்சர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர் என, தி.மு.க.,வினரே கூறுகின்றனர்.

