ADDED : ஜூலை 19, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் தாலுகா குடியூர் கிரா-மத்தை சேர்ந்தவர் ருத்ரன், 28; அதே பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ், 30; இருவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த மே, 30ல், கஞ்சா வழக்கில் இருவரையும் போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.
இருவ-ரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தங்கதுரை, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்படி, கலெக்டர் சரயு உத்தரவின்படி, நேற்று முன்தினம், ருத்ரன் மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரையும், குண்டர் சட்டத்தில் வழக்குப்ப-திவு செய்தனர். இதற்கான ஆணையை கெலமங்கலம் போலீசார், சேலம் சிறையிலுள்ள குற்றவாளிகளிடம் நேற்று வழங்கினர்.