/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
200 பேருக்கு முதல்வர்மருத்துவ காப்பீட்டு அட்டை
/
200 பேருக்கு முதல்வர்மருத்துவ காப்பீட்டு அட்டை
ADDED : பிப் 27, 2025 02:00 AM
200 பேருக்கு முதல்வர்மருத்துவ காப்பீட்டு அட்டை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சியில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நகராட்சி தலைவர் பரிதா நவாப், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், 200 பேருக்கு முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கினர்.
இது குறித்து, நகராட்சி தலைவர் பரிதாநவாப் கூறியதாவது:  கிருஷ்ணகிரி நகரில் பலர், காப்பீட்டு அட்டை இல்லாமல் இருப்பது தெரிந்தது. கிருஷ்ணகிரி நகராட்சி உட்பட்ட, 33 வார்டுகளிலும் மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், புதியதாக விண்ணப்பித்தவர்கள், காப்பீடு அட்டை தொலைத்தவர்கள் உட்பட, 200 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மீண்டும் முகாம்கள் நடத்தப்பட்டு காப்பீட்டு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அட்டையின் மூலம், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மொத்தம், 5 லட்சம் ரூபாய் வரையில், இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

