/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 206 போலீசார் இடமாற்றம்
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 206 போலீசார் இடமாற்றம்
ADDED : ஜூலை 18, 2024 01:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாரில், 206 பேர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எஸ்.எஸ்.ஐ., ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் பணியாற்ற கூடிய போலீசார் இட-மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதில், பலர் உட்கோட்டத்திற்குள் உள்ள போலீஸ் நிலையங்க-ளிலும், சிலர் உட்கோட்டம் விட்டு, மற்றொரு உட்கோட்டத்-திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்-பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, போலீசார் பலர் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி, மாவட்ட எஸ்.பி.,யிடம் இடமாறுதல் கோரி, விண்ணப்பித்த மனுக்கள் அடிப்படையிலும், நிர்வாக காரணங்களுக்காகவும், இந்த இட-மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த இடமாற்ற உத்தரவு, வழக்கமான நடைமுறை தான் என்றும் தெரிவித்தனர்.