/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பேரிகை அருகே ரூ.2.50 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
/
பேரிகை அருகே ரூ.2.50 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
பேரிகை அருகே ரூ.2.50 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
பேரிகை அருகே ரூ.2.50 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
ADDED : மே 04, 2024 01:33 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் போலீசார், அப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே, நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த 'மகேந்திரா' எக்ஸ்.யூ.வி., காரை சோதனை செய்ய நிறுத்தினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார்.
சிறிது துாரத்தில் கார் பள்ளத்தில் சிக்கி, டிரைவர், மற்றொருவர் தப்பியோடினர். காரில் சோதனை செய்த போது, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட, 270 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.
காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, அதன் உரிமையாளர் வேலுார், அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிந்தது. புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
* சூளகிரி இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், மாரண்டப்பள்ளி அருகே கிருஷ்ணாபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 37, என்பவர் வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. அவரது வீட்டில் சோதனை செய்து, 92 மதுபான பாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்த போலீசார், ஜெயப்பிரகாைஷ கைது செய்தனர்.