/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கலைக்கல்லுாரியில்3வது பட்டமளிப்பு விழா
/
அரசு கலைக்கல்லுாரியில்3வது பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 12, 2025 01:42 AM
அரசு கலைக்கல்லுாரியில்3வது பட்டமளிப்பு விழா
ஓசூர்:ஓசூர், கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் பாக்கியமணி விழாவை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா, இளநிலை பாடப்பிரிவுகளில், 1,139 பேர் மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில், 222 என மொத்தம், 1,461 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
மாணவர்கள் எப்போதும் தங்களை தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும். முயற்சியில் வரும் தடைகளை கண்டு தளராமல் தொடர்ந்து முன்னேற வேண்டும். கல்வியில் பல்வேறு சாதனைகளை படைத்து, பட்டம் பெற்ற மாணவர்கள் சமூகம் போற்றும் வகையில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும்.
இவ்வாறு பேசினார்.மாணவ, மாணவியர் பட்டங்களை பெற்று, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

