/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து
/
கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து
கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து
கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட 3 பேருக்கு கத்தி குத்து
ADDED : ஜூலை 17, 2024 02:38 AM
தர்மபுரி;தர்மபுரி அடுத்த, ஒட்டஹள்ளியை சேர்ந்தவர் புருசு பெருமாள். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில், கூட்டுறவு சங்க கட்டத்திற்கு இடம் வழங்கி உள்ளார். அவரது மகன் சேட்டுக்கு, கூட்டுறவு சங்கத்தில் வாட்ச்மேன் பணி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புருசு பெருமாளின் உறவினர் மணி, அந்த இடம் தனக்கு சொந்தமானது என அடிக்கடி, கூட்டுறவு சங்கத்தில் புகுந்து தகராறு செய்து வந்துள்ளார். நேற்றும் அங்கு வந்த மணி, கூட்டுறவு சங்கத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என, கூட்டுறவு சங்க செயலாளர் முகமதுயாசின், 58, என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அவரையும் அங்கிருந்த கார்த்திகேயன், பழனி ஆகியோரையும் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது, கூட்டுறவு சங்கத்தில் இருந்தவர்கள் மணியிடமிருந்து, கத்தி குத்தில் படுகாயம் அடைந்த, 3 பேரையும் மீட்டு, தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மதிகோன்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.