/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வங்கி மேலாளர் வீட்டில் 36 பவுன் நகை திருட்டு
/
வங்கி மேலாளர் வீட்டில் 36 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூன் 14, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் பிருந்தாவன் நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன், 40, எச்.டி.எப்.சி., வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த, 11ல், தன் குடும்பத்தினருடன் ஒரு அறையில் துாங்கியுள்ளார். நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், வீட்டின் மற்றொரு அறையின் பீரோவிலிருந்த, 36 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
மறுநாள் காலை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் பீரோவில் இருந்த நகைகள் திருடு போனதையும் பார்த்து, அன்பழகன் அதிர்ச்சியடைந்தார். அவர் புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.