/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 541 தெருநாய்களுக்கு கருத்தடை
/
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 541 தெருநாய்களுக்கு கருத்தடை
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 541 தெருநாய்களுக்கு கருத்தடை
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 541 தெருநாய்களுக்கு கருத்தடை
ADDED : ஜூலை 14, 2024 02:11 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 45 வார்டுகளில், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
அதனால், தெருநாய்களை பிடித்து அவற்றுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, ஆனந்த் நகர் பகுதியில் அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது. அங்கு, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, இனப்-பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி போடுதல், ஏ.ஆர்.வி., தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் நாய்-களை கவனித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி-றது. கடந்த மார்ச் முதல், தற்போது வரை, 541 தெருநாய்கள் பயிற்சி பெற்ற பணியாளர்களால் பிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக, மாநகர நல அலுவலர் பிரபா-கரன் தெரிவித்துள்ளார். மேலும், தெருநாய்கள் பிடிக்கப்பட்ட அதே தெருக்களிலேயே விடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிக்கு, பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பை அளிக்க, மாநக-ராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.