/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
7வது நாளாக தொடரும் போராட்டம்55 கவுரவ விரிவுரையாளர்களுக்கு 'மெமோ'
/
7வது நாளாக தொடரும் போராட்டம்55 கவுரவ விரிவுரையாளர்களுக்கு 'மெமோ'
7வது நாளாக தொடரும் போராட்டம்55 கவுரவ விரிவுரையாளர்களுக்கு 'மெமோ'
7வது நாளாக தொடரும் போராட்டம்55 கவுரவ விரிவுரையாளர்களுக்கு 'மெமோ'
ADDED : ஜன 29, 2025 01:06 AM
7வது நாளாக தொடரும் போராட்டம்55 கவுரவ விரிவுரையாளர்களுக்கு 'மெமோ'
கிருஷ்ணகிரி, : நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், கவுரவ விரிவுரையாளர்கள், தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கல்லுாரி முதல்வர், 'மெமோ' கொடுத்துள்ளார்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, 50,000 ரூபாய் மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த, 22 முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7வது நாளான நேற்று தொடர் உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், 79 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றோம். இவர்களில், 55 பேர் எங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கல்லுாரி முதல்வர் அனுராதா, 'மெமோ' கொடுத்துள்ளார். விரைவில் பணிக்கு திரும்புமாறும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும், கூறியுள்ளார். அதேபோல உயர்கல்வித்துறை சார்பில், கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி, உள்ளிட்டோரும் எங்களிடம் போராட்டத்தை கைவிட கோரினர். ஆனால், நாங்கள் அதை ஏற்கவில்லை. நேற்று முன்தினம் முதல், இரவிலும் கல்லுாரி வளாகத்திலேயே தங்கி, காத்திருப்பு போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.