ADDED : செப் 05, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சூளகிரி வாணியர் தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று நேற்று வெறிப்பிடித்து, அவ்வழியாக சென்ற பொதுமக்களை கடித்து குத-றியது.
மொத்தம், 7க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். சூளகிரி கோட்டை தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே நாய்கள் அதிகமாக உள்ளதால், மாணவ, மாணவியர் அச்-சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, தெருநாய்-களை பிடித்து கருத்தடை செய்து, அதன் பெருக்கத்தை குறைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.