/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.81 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூஜை
/
ரூ.81 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூஜை
ADDED : பிப் 23, 2025 01:25 AM
ரூ.81 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூஜை
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, புளியம்பட்டி, மகாதேவகொல்லஹள்ளி பகுதிகளில், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குள்ளம்பட்டியில் புதிய சமுதாய கூட கட்டடம், முல்லை நகர், கணபதி நகரில், 2 பல்நோக்கு கட்டடம் மற்றும் நிழற்கூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை தலைமையில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் துவக்க விழா நடந்தது. நேற்று பூமி பூஜை செய்து பணிகள் துவக்கப்பட்டன. இதில் ஜெயபாலன், ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் பஞ்., தலைவர் கவிதா உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

