/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 850 மனுக்கள்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 850 மனுக்கள்
ADDED : ஜூலை 17, 2024 02:36 AM
ஊத்தங்கரை;ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடந்தது. காரப்பட்டு, கதவணி, கருமாண்டபதி, உப்பாரப்பட்டி, கெங்கபெராம்பட்டி ஆகிய, 5 பஞ்., பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடந்த முகாமில், 850க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், மக்களிடம் மனுக்கள் பெற்று, கணினியில் பதிவு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை ஒன்றிய சேர்மன் உஷாராணி குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் ஆப்தாப் பேகம், உதவி இயக்குனர் பஞ்.,க்கள் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, தவமணி, தாசில்தார் திருமால், வட்டார கல்வி அலுவலர் லோகேஷா, பஞ்., தலைவர்கள் காரப்பட்டு ரமாதேவி, உப்பாரப்பட்டி தமிழ்ச்செல்வி, கதவனி காந்திலிங்கம், கெங்கபெராம்பட்டி வெங்கடேசன், கருமண்டபதி அருள், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர்
பங்கேற்றனர்.