ADDED : ஜூலை 17, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி
எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்; இவரது மனைவி புவனேஸ்வரி, 22; ஓசூர் அரசனட்டி பகுதியில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இருபெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான புவனேஸ்வரிக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன், மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, பிரியா என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். பிறக்கும் போதே குழந்தை சற்று உடல்நிலை பாதித்திருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, குழந்தைக்கு தாய் புவனேஸ்வரி தாய்ப்பால் கொடுத்தார். அப்போது குழந்தை அசைவின்றி இருந்ததால், உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.