/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு
/
நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு
ADDED : மே 12, 2024 12:00 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் நடந்து வரும் நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை மேம்பாடு செய்ய, 1.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை கோவை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள், கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், கோட்டப்பொறியாளர் கணேசன், உதவி கோட்ட பொறியாளர்கள் தினேஷ்தேசய்யா, உமாசுந்தரி, உதவி பொறியாளர்கள் பிரேம்குமார், யோகபிரபா ஆகியோர் கொண்ட தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, சாலையின் தரம் மற்றும் அளவுகள், அடர்த்தி குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.