/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம ்
/
தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம ்
தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம ்
தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம ்
ADDED : ஆக 05, 2024 06:53 AM
ஓசூர்: போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த காதலன், காத-லியின் தந்தையை அடித்து கொன்று விட்டு, காதலியை கடத்தி சென்றது, கெலமங்கலம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே காமையூரை சேர்ந்தவர் முனிராஜ், 45; ஜெ.காருப்பள்ளி கூட்ரோடு அருகே ஒருவரது நிலத்தில் தங்கி, விவசாயம் செய்து வந்தார்; இவரின், 17 வயது மகளை, ஜெ.காருப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராஜ், 24, காதலித்தார். கடந்தாண்டு அக்.,23ம் தேதி சிறு-மியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரில் தேன்-கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்-குப்பதிந்து வெங்கட்ராஜை கைது செய்தனர்.
கடந்த டிச.,ல் ஜாமினில் வந்த வெங்கட்ராஜ், சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்தார். இதை முனிராஜ் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்கு சென்ற வெங்-கட்ராஜ், அவரை கடத்த முயன்றார். இதை முனிராஜ் தடுத்-துள்ளார். இதனால் அவரை கட்டையால் தலையில் தாக்கி விட்டு, சிறுமியை கடத்தி சென்றார். தலையில் பலத்த காயம-டைந்த முனிராஜ், அதே இடத்தில் பலியானார். காதலியுடன் தலைமறைவான காதலனை, கெலமங்கலம் போலீசார் தனிப்-படை அமைத்து தேடி வருகின்றனர்.