/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துரத்திய ஒற்றை யானை; அரசு பஸ் டிரைவர் சாதுர்யம்
/
துரத்திய ஒற்றை யானை; அரசு பஸ் டிரைவர் சாதுர்யம்
ADDED : மே 09, 2024 11:25 PM

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் மலை கிராமத்திற்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை, வழக்கம் போல் சென்ற இந்த பஸ்சில், 25க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
அப்போது, அய்யூர் வனப்பகுதி, சாமி ஏரி அருகே சாலை நடுவே வனத்தில் இருந்து வெளியேறிய யானை ஒன்று நின்றது. இதைப்பார்த்த அரசு பஸ் டிரைவர் தீபக்குமார், பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சை நோக்கி யானை வேகமாக ஓடி வந்ததால் பயணியர் அலறினர்.
ஆனால், நிதானமாக செயல்பட்ட டிரைவர் தீபக்குமார், பஸ்சை ரிவர்சில் ஓட்டி சென்றார். இருப்பினும், விடாமல் யானை பஸ்சை துரத்தியது. சிறிது துாரம் துரத்திய யானை, அருகிலிருந்த ஏரிக்குள் சென்றது.
இதையடுத்து, டிரைவர், பஸ்சை பெட்டமுகிலாளத்திற்கு ஓட்டிச் சென்றார். இதனால் பயணியர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.