/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி வாலிபர் பலி
/
பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி வாலிபர் பலி
ADDED : ஆக 17, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் ஜித்தேந்தர் சவுத்ரி, 28, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கிசான் ஷேக் சர்மா, 25. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தனர். கடந்த, 14 மாலை இருவரும் பொம்மண்டப்பள்ளி சாலையில் யமஹா பைக்கில் சென்றுள்ளனர்.
பொம்மண்டப்பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், அப்பகுதியிலுள்ள பள்ளி சுற்றுச்சுவரில் மோதியது. இதில், விஜய் ஜித்தேந்தர் சவுத்ரி பலியானார். கிசான் படுகாயம் அடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

