ADDED : மே 10, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில், கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிர்வாகி சார்பில் நீர்மோர், பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 18வது நாளாக நேற்று, கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், ஓசூர் மாநகராட்சியின் மண்டல குழு தலைவருமான ஜெயபிரகாஷ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.இதில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இதில், ஏராளமான, அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.