/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய தொழிலாளர் சங்கம் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 05, 2024 03:40 AM
ஊத்தங்கரை: வீட்டுமனை பட்டா கேட்டு, அகில இந்திய விவசாய தொழிலா-ளர்கள் சங்கம் சார்பில், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டத்த-லைவர் லெனின் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் முத்து, ஊத்தங்கரை வட்-டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், வீட்டுமனை இல்லாத கூலித்தொழிலாளர்களுக்கு, அரசு அறிவிப்பின்படி வீட்டுமனை இடம் வழங்க வேண்டும். பல வகையான புறம்போக்கு இடங்-களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்க-ளுக்கு, பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்கி, பல ஆண்டுகளாகியும், கிராம கணக்குகளில் கொண்டு வராததை, உடனடியாக கொண்டு வந்து, சிட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.இதில், வட்டச்செயலாளர் செல்வராசு, சிங்காரப்பேட்டை பகுதி குழு எத்திராஜ், மாதர் சங்கம் கவிமணிதேவி உட்பட, விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.