/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் தண்டரை கிராம மக்கள் அதிர்ச்சி
/
மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் தண்டரை கிராம மக்கள் அதிர்ச்சி
மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் தண்டரை கிராம மக்கள் அதிர்ச்சி
மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் தண்டரை கிராம மக்கள் அதிர்ச்சி
ADDED : செப் 05, 2024 03:37 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, தண்டரை பஞ்., உட்பட்ட சனத்-குமார் காட்டாறு பகுதி, இஸ்மாம்பூர், அடவிசாமிபுரம் போன்ற பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது.
கடந்தாண்டு செப்., மாதம் சனத்குமார் நதி அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை தாக்கி கொன்று இழுத்து சென்றது. தனியார் ரிசார்ட்டை ஒட்டியுள்ள லேஅவுட் பகுதியில், ஓய்வு பெற்ற டாக்டரின் நாயை, சிறுத்தை கடித்து கொன்றது. வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்-தனர். அதை பிடிக்க, தனியார் ரிசார்ட் பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஓராண்டாகியும் இன்னும் சிறுத்தை பிடிபட-வில்லை. இந்நிலையில், தண்டரை பஞ்., உட்பட்ட பகுதிகளில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, தகவல் பரவி வருகிறது. இது, தண்டரை பஞ்.,த்தை சுற்றியுள்ள கிராம மக்-களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வனத்துறையினர் உடனடி-யாக சிறுத்தையை பிடிக்க தனி குழுவை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பாறைகளில் பதுங்கி வாழும் சிறுத்-தையை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, வனத்துறையினரிடம் கேட்டபோது, 'தனியார் ரிசார்ட் குடியிருப்பு பகுதியில், ஆண் சிறுத்தை ஒன்று சுற்றித்திரி-வது உண்மை தான். அந்த சிறுத்தை பேவநத்தம் வனப்பகுதி வரை சென்று திரும்புகிறது. தற்போது, அந்த சிறுத்தை நாய், ஆடு என எதையும் தாக்கியதாக புகார் வரவில்லை. மேலும் ஒரு, சிறுத்தை நடமாட்டம் இல்லை' என்றனர்.