/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி...
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி...
ADDED : ஜூன் 27, 2024 03:48 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பற்குணன் தலைமையில், முன்னதாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவ, மாணவியர் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணர்வு கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
இதில், பி.டி.ஏ., தலைவர் நடராஜ், மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன், பள்ளி ஆசிரியர்கள், கல்லாவி அதியமான் ரூரல் டெவலப்மென்ட் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் கந்தவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பலர் கலந்து கொண்டனர்.
* தேன்கனிக்கோட்டை உட்கோட்ட போலீசார் சார்பில், மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
வனத்துறை சோதனைச்சாவடி அருகே துவங்கிய பேரணியை, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
அதேபோல், ஓசூர் உட்கோட்ட போலீசார் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடந்தது. ஓசூர் டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.