/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாஸ்போர்ட், விசா இன்றி நுழைந்த வங்கதேச நபர் கைது; சிறுமி மீட்பு
/
பாஸ்போர்ட், விசா இன்றி நுழைந்த வங்கதேச நபர் கைது; சிறுமி மீட்பு
பாஸ்போர்ட், விசா இன்றி நுழைந்த வங்கதேச நபர் கைது; சிறுமி மீட்பு
பாஸ்போர்ட், விசா இன்றி நுழைந்த வங்கதேச நபர் கைது; சிறுமி மீட்பு
ADDED : ஆக 09, 2024 02:33 AM
ஓசூர்:வங்கதேசத்தைச் சேர்ந்தவர் சாஹினுார் மொல்லா, 27, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இந்திராகாந்தி நகரில், சர்ஜாத்பாஷா, 68, என்பவருக்கு சொந்தமான வீட்டில், இரண்டு மாதங்களாக வாடகைக்கு குடியிருந்தார். இவருடன், வங்கதேச நாட்டைச் சேர்ந்த, 15 வயது சிறுமியும் இருந்தார்.
இந்நிலையில், பெங்களூரிவிலுள்ள தன்னார்வ அமைப்பிற்கு போன் செய்த சிறுமி, 'சாஹினுார் மொல்லா என்னை வங்கதேசத்தில் இருந்து கடத்தி வந்தார்' என தகவல் தெரிவித்தார். ஹட்கோ போலீசார் விசாரித்தனர்.
அப்போது, சாஹினுார் மொல்லா, தான் காதலித்து வந்த அந்த சிறுமியை வங்கதேசத்தில் இருந்து பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் கடத்தி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைந்து, அங்கிருந்து ஓசூர் வந்து தங்கியது தெரிந்தது.
மேலும், சிறுமியை கடத்தியது தொடர்பாக, வங்கதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதும் உறுதியானது. சாஹினுார் மொல்லாவை கைது செய்த போலீசார், நேற்று சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
சிறுமியை மீட்டு, ஓசூர் அண்ணாமலை நகரிலுள்ள ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.