ADDED : அக் 06, 2026 06:04 AM
கிருஷ்ணகிரி; காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில், 7 நாட்கள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில், 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு, தலைமை ஆசி-ரியர் வேந்தன் தலைமை வகித்தார். நாட்டு நலப்-பணி திட்ட அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் ஷாலினி, காவல்துறை அதிகாரிகள் அமர்நாத், முருகப்
பெருமாள், மதிவாணன், ஆசிரியர்கள் ஜெயக்-குமார், அன்பு, ரஞ்சித்குமார், ராஜசேகர் மற்றும் பெண்ணார் அரிமா சங்க தலைவர் பவுன்ராஜ் ஆகியோர் கருத்தாளர்களாக முகாமில் பணி-யாற்றினர்.
முகாமில், பள்ளி வளாக துாய்மை, 100 மரக்கன்-றுகள் நடுதல், 50,000 விதைப்பந்துகள் தயாரித்தல், உடற்பயிற்சி, யோகா, போதைப்பொருள் விழிப்புணர்வு, பையூர் அரசு வேளாண் கல்லுாரிக்கு களப்பயணம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஆகிய நிகழ்வுகள் நடந்-தன.
