ADDED : ஆக 30, 2024 04:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், சரக அளவி-லான, 2 நாள் விளையாட்டு போட்டிகள், பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் நேற்று துவங்கியது.
முன்னதாக, கையுந்து பந்து, கைப்பந்து, எறிபந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து, டென்னிஸ், கேரம், கோ-கோ, கபடி, கால்பந்து, பூப்பந்து போன்ற, 14 வகையான போட்டிகள், 14, 17 மற்றும், 19 வயது பிரிவில் நடத்தப்பட்டன.நேற்று தடகள போட்டியான, 100 மீட்டர், 200, 400, 600, 800, 1,500, 3,000, 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்போட்-டிகள், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்-டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,079 மாணவ, மாணவியர் பங்-கேற்றனர். போட்டிகளை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதிய-ழகன் துவக்கி வைத்தார். டி.இ.ஓ., சரவணன், மாவட்ட உடற்-கல்வி ஆய்வாளர் வளர்மதி, தலைமை ஆசிரியர் மலர்கொடி, சரக துணை செயலர் வள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.
14 வகையான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடிப்ப-வர்களும், தடகள போட்டியில் முதல் மற்றும் 2ம் இடம் பிடிக்கும் மாணவ, மாணவியரும், மாவட்ட அளவிலான போட்-டியில் கலந்து கொள்ள தகுதி பெற உள்ளனர்.