/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு பதிவு
/
மாணவிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : மே 10, 2024 11:14 PM
ராயக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த தொட்டிநாயக்கனஹள்ளியைச் சேர்ந்தவர் முருகேசன், 24; விவசாயி. இவர், அதே ஊரை சேர்ந்த சாரதி, 19, ஸ்ரீதேவி, 30, நகுலன், 60, ரஜினி, 40, ஆகியோர் உதவியுடன், அப்பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவியை, 6ம் தேதி திருமணம் செய்தார்.
அதே நாளில் திருமணம் குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை புகார் சென்ற நிலையில், மாணவி தன் வீட்டிற்கு திரும்பி வந்தார். 8ம் தேதி இரவு, 8:00 மணிக்கு முருகேசன் தரப்பினர் மாணவி வீட்டிற்கு சென்று அவரை அழைத்தனர்.
அப்போது வார்த்தை தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த முருகேசன் தரப்பினர், மாணவியின் தாயை தாக்கி, மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, மாணவியின் தாய் நேற்று முன்தினம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, சாரதி, ஸ்ரீதேவி, நகுலன், ரஜினி, மாணவியை திருமணம் செய்த முருகேசன் ஆகிய ஐந்து பேர் மீது, குழந்தை திருமண சட்டத்தில், ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.