/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

ADDED : மே 11, 2024 11:43 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.சி., பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், 33ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு நாட்றம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து சாமுண்டீஸ்வரி அம்மன், தோட்ராய சுவாமி, வீரபத்திர சுவாமி, லக்கம்ம சுவாமி, சிக்கம்ம சுவாமி, காவேரியம்ம சுவாமி மனைகள், கரகம் மற்றும் மண்டு எருதோடு மேகலசின்னம்பள்ளி கிராமத்திற்கு வந்தடைந்தன. மாலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, கங்கனம் கட்டுதல், சுவாமிக்கு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை, 7:00 மணிக்கு வீரபத்திர சுவாமி கரகம் அலங்கரித்தல், தோட்ராய சுவாமி, வீரபத்திர சுவாமி, லக்கம்ம சுவாமி, சிக்கம்ம சுவாமி, காவேரியம்ம சுவாமி ஊர்வலம் நடந்தன. அருள் வந்த பக்தர்களின் தலையில், பூசாரி தேங்காய் உடைத்தார். தொடர்ந்து தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
பின்னர், தலைமுடி காணிக்கை செலுத்துதல், முன்னோர்களுக்கு படைத்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு எடுத்தல், மேல் விளக்கு ஏற்றுதல் ஆகியவை நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, சாமுண்டீஸ்வரி அம்மன் பூ கரகம், பல்லக்கு பூந்தேர் பம்பை, தப்பட்டையுடன் ஊர்வலமும், வாணவேடிக்கையும் நடந்தன. ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.